காதல் யாருக்கு சொந்தம்?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான். காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்றால் அது தவறு.
கருங்கல்லுக்கும் உண்டு, செம்மனிற்கும் உண்டு, நீல வானத்திற்கும் உண்டு, அதில் நீந்துகின்ற விண்மீனுக்கும் உண்டு, அதை பிரதிபலிக்கும் நீலக்கடலில் நீந்துகின்ற நீலத்திமிங்கிலத்திற்கும் உண்டு, வாசமில்லா மலருக்கும் உண்டு, அதில் தேனை தேடும் வண்டுக்கும் உண்டு, நிறம்மாறா வானவில்லுக்கும் உண்டு, நொடிக்கு நொடி நிறம் மாறும் ஓசனிச்சிட்டுகளுக்கும் (சுராகவ் – hummingbird) உண்டு, காதல்! 💞
என் முதல் காதலும், காதலியும்!
பருவம் வந்த பின்பு தான் காதல் வரும் என்பார்கள், ஆனால் நான் என் பார்வை வரும் முன்னே அவள் மீது காதல் கொண்டேன் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உன்மை!
ஒருகோடி அணுக்களில் ஒன்றை மட்டுமே காதலித்தேன், அந்தப்பிரியத்தில் கருவும் ஆனேன், உருவும் ஆனேன்!
அவள் யார் என்று அறியாமல், பேர்கூட தெரியாமல் அந்த நொடி முதலே அவளை காதலிக்க தொடங்கினேன்.
மனிதர்களில் பலரும் தன் முதல் காதலும் காதலியும் யார் என்றல், சற்றே யோசிப்பார்கள். ஆம், இந்த உலகில் தோன்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரு இயற்கையான காதல் தோன்றும் முதலிடம், தன் தாயின் கருவறை!
ஆண், பெண் என்ற பேதமின்றி இந்த உலகில் வாழும், வாழ்ந்து மறைந்ந்த, வாழப்போகும் அனைத்து மனிதர்களின் முதல் காதலும் காதலியும் அவர்கள் தாய் தான், அம்மா – the 1st lover for all! 🤰
இவ்வுலகில் வாழும் அனைத்து ஆண்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு ஆசை, அவன் தாயை போலவே தாரம் அமைய வேண்டும் என்பதுதான்! இது எல்லாம்வல்ல இறைவனுக்கும் பொருந்தும், “பெரும்பாலும் தாயை போல மணப்பெண் வேண்டுமென்று பிள்ளையார் குளத்துக்கரை, ஆற்றங்கரையில் குடி கொண்டிருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன.”
காரணம், தன்னையறியாமல் அவன் இந்த பூவுலகிற்க்கு வரும்முன்னே அவளை காதலிக்க தொடங்கிய உணர்வு தான்!
- அவள் அவனின் அணைத்து அசைவுகளையும் ரசிப்பவளாய் இருப்பாள்.
- அவள் அவனின் அணைத்து ஆசைகளையும் நிறைவேற்றுபவளாய் திகழ்வாள்.
- அவனின் ஆரோகியத்திற்காக அவளின் ஆசைகளை துறப்பவளாய் இருப்பாள்.
- இருள் சூழ்ந்த கருவறையின் அறஒளியாய் அமைவாள்.
தாயை போல தாரம் அமைந்தால்!
தன் தாயை போல தாரம் அமைந்துவிட்டால் இந்த உலகத்தில் அவனை போன்ற அதிர்ஷ்டசாலி யாருமில்லை! அப்படி ஒரு அதிர்ஷ்டசாலி நான் என்பதில் கர்வத்துடன் பெருமிதம் கொள்கின்றேன்.
“அழகான மனைவி,
அன்பான துணைவி,
அமைந்தாலே பேரின்பமே” என்று சும்மாவா கூறினார்கள்!
ஆமாம், என்னவள், என் கண்மணி, நான் தவிம்மின்றி கிடைத்த வரம்!
அப்படி என்ன அதிர்ஷ்டம் என்று தானே கேட்குறீங்க? இதோ சொல்கிறேன்.
எங்களுக்கு திருமணமாகி ஓராண்டிற்கும்மேல் ஆகிறது, பெரியோர்களால் பார்த்து சேர்த்து வைய்த்த ஜோடி தான் (arranged marriage)!
- பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவன்மார்கள் தங்களின் சமலயறையை பகிர்ந்துக்கொள்ள விரும்புவார்கள் (at least the 2k kids). இந்த ஓராண்டில், நான் இது வரை, என் வீட்டுக்கு சமயலறைக்குள் கை கழுவ மட்டுமே நான் நுழைந்துருகிறேன். என் தாயும் என்னை இதுபோலதான் வளர்த்தாள்!
- இந்த நொடி வரை, ஒரு புடவை கடையில் கூட என்னை நிறுத்தியது இல்லை!
- நாங்கள் சென்ற அணைத்து தொலைதூர (bike rides during honeymoon) பயணத்தின்போதும், சரிபாதியாய் என் கண்மணி வண்டி ஓட்டி செல்வாள்.
நமக்குக்கு புடிச்ச இடத்துக்கு, நம்ம பைக்ல, நம்மளையே பின்னாடி அமர்த்தி, நமக்கு புடிச்ச பெண்ணே நம்முடன் தொலைதூர பயணம் செய்தால், அது சொர்கம் தானே!
என் விருப்பங்களை என் விருப்பம் போலவே செய்ய விரும்புவாள்!
- எனக்கு பாட பிடிக்கும், ஒரு நாலும் நான் எவ்வளவு பாடிய (கத்திய) போதும், என்னை தடைசெய்ததே இல்லை.
- நான் கிரிக்கெட் பார்க்கும் போது, ஒருநாளும் நான் (ரோஜா) நாடகம் பார்க்க வேண்டும் என்று டிவி ரிமோட்டுக்கு அடமோ சண்டையோ பிடித்ததில்லை.
- என் வேலைப்பளுவை உணர்ந்து எனக்கு தேவையான அனைத்தையும் என்னருகே வைப்பாள்! (secret of my productivity during my Work From Home)
- இவை அனைத்தும் பெரும்பாலான இல்லத்தரசிகள் செய்தாலும், என்னவளோ இல்லதரசி மட்டும்மல்ல, ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவள். ஒருநாளும், தன் பணியின் சுமையை காரணங்காட்டி என்னை ஒரு வீட்டுவேலையும் வாங்கியதில்லை (இயல்பாகவே ஆண்களுக்கு அது வாராது).
இதுதான் பெண்களின் தனிசிறப்பென்று நான் உணர்தேன்.
தாரமாய் இருந்தவள் தாயுமானாள்!
தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகே தாயாகும் பெண்ணே!
என் தாரமாய் இருந்தவள் என்னால் தாயுமானாள்.
என் கண்மணி எனக்கு கணவன் என்ற படத்திலிருந்து, தந்தை என்ற பதவிஉயர்வையும் கொடுத்துவிட்டாள்.
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி, பிறகென்ன சந்தோஷ சாம்ராஜ்யமே!
என் கண்மணி என் உயிரை சுமக்கும் பொழுதில் தான் என் தாயின் வலிகளையும் தியாகத்தையும் உணர்ந்தேன் – ஈரயைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும் பாடு அறிந்தேனம்மா! 🤰
சமையலறை பக்கம் செல்லாதவன், சமைத்தேன்!
திருமணமாகி 9 திங்களில், சமயலைறையில் நுழையாத நான், பேரு காலத்தில் அவளுக்கு சமையலில் துணையாக நிற்க வேண்டும் என்று முதன்முதலில் நுழைந்தேன்!
முதலில் கண்மணி சற்றே என்னை தடுத்தாலும், எங்களின் கருவிலிருக்கும் உயிருக்காக என்னை சமைக்க வைத்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள், நான் அதை விரும்பி செய்ய தொடங்கினேன்!
அவள் சிரித்தால், எங்கள் கருவும் சிரிக்குமல்லவா! 👶🏻
என் முதல் காதல் உன்னுடையதில்லை, ஆனால்?
ஆம், என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால், காலங்கள் கரைந்தோடினாலும், கடல் நீர் வற்றிப்போனாலும், காற்றை அணைபோட்டு தடுத்தாலும், உன் கரம் பிடித்த மறுநொடிமுதலே என் தாய்க்கு பின் என் வாழ்வில் வந்த முதல் காதலி நீ, நான் கரைசேரும்வரை கடைசியும் நீயே – மணமகனின் சத்தியம்! 🙏
இப்படி ஒரு அதிர்ஷ்ட தேவதை என் வாழ்கை துணைவியானபின், மறுவார்த்தை பேசாமல், மடிமீது தலைசாய்ந்து, மழலையாய் மாறி, மணிமுத்தம் பதித்தாலே சொர்கம்! சொர்கம்!! சொர்கம்!!! 💖
இந்த கணவன் மனைவி காதல் கதைகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 😛