எங்கள் தலை தீபாவளி காதல் கதை – A True Tamil Love Story

53 / 100

பல எதிர்ப்புகளையும் தாண்டி கல்யாணம் செய்த காதல் ஜோடிகளில் நானும் என் கண்மணியும் அடங்குவோம்! ?

ஆம், பல எதிர்ப்புகள், இருவீட்டாருடனும்.

என் வாழ்கை பயணத்தில் கண்மணி என் காதலியாக மட்டுமே இருக்க என் மனம் விரும்பவில்லை, அவளும் தான்.

என் செய்வேன், என் காதல் 7 வருட காதல், மூச்சுள்ளவரை தொடரும் காதலும்தான் ?

நான் என் மேல் வைத்த நம்பிகிக்கையை விட, கண்மணி என் மேல் வைத்த நம்பிக்கையே அதிகம்.

நம்பிக்கை அதானே எல்லாம். ?

அதன் விளைவு, ஒரு நன்நாளில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டோம். ? ?

நாளை, தீபாவளி, ஆம் எங்கள் தலை தீபாவளி.

எனக்கு அவளும் அவளுக்கு நானும் என்ற வாழ்க்கையில் தலை தீபாவளி என்பது எதோ யாருக்கோ எங்கயோ நடக்கும் ஒரு சடங்காகவே பார்க்க தோன்றியது.

காதலியாக அவள் கண்ணில் ஒரு சோகமும் இல்லையென்றாலும், மனைவியாக அவள் கண்ணில் இருவீட்டாரின் பெற்றோர்களுடன் தன் தல தீபாவளியை கொண்டாட முடியாத ஏக்கத்தை ஒரு காதல் கணவனாக நன்கு உணரமுடிந்தது.

நானும் அந்த ஏக்கத்தை தீர்க்க என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் வேலையில், அலுவகத்துக்கு நேரம் ஆயிற்று, காலை உணவு தயார், “போய் குளிச்சிட்டு கெளம்புடா” என்று சமையல் அறையில் இருந்து ஒரு சத்தம், கண்மணி தான்.

அரக்க பறக்க அலங்காரம் செய்து கொண்டு, கண்மணி சமைத்த “உப்மாவை பிரியாணியாக நினைத்து அருந்தினேன்”.

வழக்கம் போல, அது சரி இல்ல இது சரி இல்லனு சொல்லி, அவளே எனக்கு சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து, வழி அனுப்ப முயன்றாள்!

இருவரும் வாசல் வந்ததும், மறந்துட்டியா என்று கேட்ட உதடுகளை என் உதட்டோடு வைத்து இல்லை கண்மணி என்று ஒரு காதல் முத்தம் பொழிந்தேன். ?

வீட்டிலிருந்து புறப்படும் முன், ஒரு முத்தம் தரவேண்டும் என் கண்மணியின் காதல் கட்டளை.

இதற்கு ஒரு அழகான காரணமும் உண்டு.

அந்த முத்தம், நான் வழியில் செல்லும் பொது, கண்மணி உனக்காக வீட்டில் காத்துக்கொண்டிருப்பேன், பத்திரமாக போய்வா என்று எனக்கு உணர்த்திக்கொண்டிருக்குமாம், உண்மைதான்.

நாளை தீபாவளி என்பதால், வீட்டில் அதிகம் வேலை இருக்கும், அலுவலகத்திலுருந்து சீகிரம் வந்துவிடு என்று அன்பு கட்டளையிட்டாள் என் கண்மணி.

அலுவலகத்தில் அவள் கண்களின் சோகமே என் கண்முன்னே வந்து போய்க்கொண்டிருந்தது! நான் என்றுமே அவ்வாறு இருந்தது இல்லை. ?

எனக்கே அது பிடிக்கவில்லை, மதியம் விடுமுறை அறிவித்துவிட்டு வீட்டுக்கு சென்று, கண்மணியுடன் நேரம் செலவிடலாம் என்று முடிவு செய்தேன்.

ஆனால் நான் அதை கண்மணியிடம் சொல்லவில்லை.

அலுவலகத்திலிருந்து புறப்பட தயாரானேன்.

மனதில் மீண்டும் ஒரு குழப்பம், நான் சென்றால் மட்டும் கண்மணியின் சோகம் தீருமோ என்று?

வீடு வந்தேன், வாசலில் எனக்காக கண்மணி காத்திருந்தாள், இது புதிதில்லை என்றாலும், இன்று விட்டுக்குள் நுழையும் பொழுது மணி 9.

“சீகிரம் வா” என்ற அன்பு கட்டளையையை மீறியது மட்டும்மல்லாமல், நேரம் தாழ்த்தியும் வந்திருக்கிறேன் என்று என்னால் நன்கு உணர உணரமுடிந்தது.

ஒரு வார்த்தை கூட, ஏன் தாமதம் என்று கேட்காமல், குளித்துவிட்டு வா இரவு உணவு தயார் என்று குளியலறையில் வெந்நீர் வைத்துக்கொண்டே கூறினாள்.

என் காதல் கண்மணியல்லவா அவள். ?

இரவு உணவருந்திவிட்டு, உறங்க சென்றோம்.

தன் தாய்தந்தையை காணவேண்டும்போல் இருக்கிறது என்று கூறி உறங்கிவிட்டாள், மனதின் பாரத்தை இறக்கிவிட்டாளல்லவா. ??

ஏனோ அவளின் மிருதுவான அனைப்பையும் தாண்டி, அவள் கண்களில் கசிந்த கண்ணீர் என் தூக்கத்தை துளைத்தது.

பொழுதும் விடிந்தது.

வழக்கம் போல, கண்மணிக்கும் சேர்த்து காபி போட சமைலறையில் நுழைந்த என்னை சூடான காபி நறுமணம் வரவேற்றது.! ☕️

என்ன ஒரு ஆச்சர்யம், கண்மணி இப்படி செய்ய மாட்டாள் என்று தோன்றினாலும், ஒரு வேலை, தல தீபாவளி என்பதால் குடும்ப பாங்கான மனைவியாகிவிட்டாலோ என்றும் தோன்றியது.

எப்படி இருந்தால் என்ன, காபி கிடைத்ததே எடுத்து அறுந்து என்று எனக்குள் இருந்த சோம்பேறி கூறினான்.

அப்படியே எடுத்து வெளியே வாசலுக்கு வந்தேன்.

வாசலில், “பிடித்து வைத்த பிள்ளையாரை சுற்றி உள்ள கோலத்தின் அருகில், பச்சை நிற பட்டுபுடவையுடன், தலை நிறைய மல்லிகை பூவும், நெற்றியில் குங்கும திலகமும், ஜொலிக்கும் வளையளுக்கு அழகு சேர்க்கும் விதமாய் கையில் இருந்த மருதாணியுடன், கருநிற கண்மையின் நடுவில் மின்னும் அழகிய கண்களால், அசல் தேவதையாய் என்னை நோக்கினாள்”, என் கண்மணி. ??‍♀️

ஒரு கணம் இத்தனை அழகை எங்கே ஒளித்து வைத்திருந்தால் என்றே தோன்றியது.

வாசல் என்றும் பாராமல், கண்மணியின் அருகில் சென்று, கைககளை பிடித்து, “Semma Cute Darling” என்று கூறி, கன்னத்தில் முத்தமிட்டேன். ?

அவ்வளவு அழகாவா இருக்கேன், என்று அழகிய பெண்களுக்கே உரித்தான தோணியில் கேட்டால்.

வாசல் என்றும் பாராமல், முத்தத்தை உதட்டில் பதித்து நிருபீக்கவா கண்மணி என்றேன்?

இந்த கட்டளையை, பல் துலக்கிய பின் கேட்டுருந்தால் ஒரு வேலை பரிசீலித்திருப்பேன், ஆனால் நீ துரதிர்ஷ்டசாலி என்று கிண்டலாய் கூறினாள்.

இருந்தாலும், நான் உனக்கு இன்னொரு அரிய வாய்ப்பளிக்கிறேன் என்று தொடர்ந்தாள்.

என்ன என்று வினவினேன்.

இந்த தேவதையை, முடிந்தால் இப்படியே தூக்கி ஒரு சிறு நகர்வலம் வா என்றாள்.

எனக்கும் ஆசை தாண்டி, ஆனால், நான் வேண்டுமானால் இப்படியே வாசலில் இருந்து வீட்டுக்குள் தூக்கி செல்லவா என்றேன்.

அதெல்லாம் முடியாது, இந்த தெரு முட்டும் வரை தூக்கி செல் என்று பிடிவாதமாய் கூறினாள்.

கொஞ்சம் சஞ்சலமாய் இருந்தாலும், அதிகாலை வேலையில் ஆள் நடமாட்டம் குறைவும், என் பொண்டாட்டி தானே என்ற செருக்கும் எனக்கு ஒத்துழைப்பு தந்தது.

அவளை அப்படியே கையில் அல்லி நடக்க தொடங்கினேன்!

சிறு தூரம் சென்றதும், மீண்டும் வாசலை நோக்கி நடந்தேன்.

இந்த காட்சியை என் தாய்தந்தை பார்த்தால், “நான் சரியான கணவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு பிறக்குமல்லவா” என்று கேட்டுக்கொண்டே ஆனந்த கண்ணீருடன் “இனிய தலை தீபாவளி என் காதல் புருஷா” என்று செல்ல முத்தம் வைத்தாள். ?

சரி வீடு வந்துடுச்சி, அங்க பாரு என்றேன்.

வீட்டுமுற்றத்தில், தன் தாய்தந்தையுடன் சேர்த்து தன் மாமனார் மாமியாரையும் ஆனந்த அதிர்ச்சியில் கண்மணி வரவேற்றது, அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்தது.

இது எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு, நேற்றிரவு நான் தாமதமாய் வந்ததின் பின்னணியாய் இருக்குமோ என்ற கேள்வியுடன் வந்த அனைவருக்கும் உணவு தயார் செய்ய உள்ளே சென்று, சமைலறையில் என்னை உதவிக்கு அழைத்தாள்.

வாசலில் நிராகரித்த ஆசையை உள்ளே அவளே நிறைவேற்றிய அவேளயில், நான் என்றுமே அதிர்ஷசாலி தான் கண்மணி, நீ என்னருகில் இருக்கும் வரை என்று கூறிவிட்டு, எங்கள் தலை தீபாவளியை அவள் ஆசைக்கேற்றார் போல் அமைத்த சந்தோஷத்தில் வெளியே வந்து இருவீட்டாருடனும் கலந்துரையாடிக்கொண்டிருந்தேன்.

அனைவரின் கண்களுமே ஆனந்த கண்ணீரால் நனைந்ததை நான் அறிவேன். 😛

Read more – என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால்!

அணைத்து காதல் நெஞ்சங்களுக்கும், என் இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள். ?

2 thoughts on “எங்கள் தலை தீபாவளி காதல் கதை – A True Tamil Love Story

Leave a Reply

Your email address will not be published.