அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – இறுதி பகுதி

62 / 100

அவள் அமைதியை மேலும் தொடர்ந்தாள்.

ஏன் இந்த அமைதி என்று தெரிந்துகொள்ள அவளும் நானும் இரவும் பயணமும் – Part 4 படிக்கவும்!!

நம்ம பயணம் இன்னும் சில மணித்துளிகளில் முடிய போகுது கண்மணி… இவளவு நேரம் நல்லா இருந்து… முடியும் போது என்னடி பிரச்னை என்று கேட்டேன்!

சற்று சிந்தித்தவள்…

என்னை பின்னிருந்து அணைத்தாள்!

மிகவும் அருமையாக இருந்தது.

அனால்!

அந்த அணைப்பின் இன்பத்தை விட… கண்மணியின் கண்ணில் கசிந்த கண்ணீர்… வண்டியின் வேகத்தை குறைத்ததே தவிர… என் இதய துடிப்பின் வேகத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது…

ஒரு நிமிஷம் வண்டிய ஓரம் நிறுத்திட்டேன்!

என்ன ஆச்சி கண்மணி? ஏன் இந்த அழுகைனு கேட்டேன்?

அப்போவும் அமைதியாக இருந்தவள்…

நான் நடு ரோட்டுக்கு வந்து வண்டிகள் போகும் பாதையில் அமர்ந்ததை பார்த்து அதிர்ந்து ஓடி வந்து…..

விட்டா இன்னொரு அரை!

ஆனா இந்த முறை நான் கண் கலங்கவே இல்லை. நான் என் இம்முறை கண் கலங்கவில்லை என்று அவளும் நானும் இரவும் பயணமும் – முதல் அத்தியாயம் இருந்து படிக்கிறவங்களுக்கு தெரியும், எத்தனை அரை!!

அடிக்கிற கை அணைக்கும்னு ஒரு பழமொழி இருக்கு என்ற நம்பிக்கையில் தானே வண்டி ஓடுது…

நான் எதுமே பேசல…

மீண்டும் வேண்டிய start செய்தேன்…

பின்னே வந்து அமர்ந்தவள்…

இம்முறை  அவளே மௌனத்தை கலைத்தாள்!

என்னை பார்த்து இந்த பயணம் முடிய போறத நினைச்சா உனக்கு வருத்தமா இல்லையா Mani என்று கேட்டாள்?

வண்டியின் வேகத்தை கூட்டுக்கொண்டே… எனக்கு என்ன கண்மணி வருத்தம்! இது இன்றோட முடியிற விஷயம் இல்லையே என்று casual ஆகா சொன்னேன்!

அப்பறோம் நானே அவளிடம் கேட்டேன், உனக்கு எப்படி இந்த இடம் தெரியும்? எப்போ plan பண்ணின, ஒரு வாரத்துக்கு முன்னடியா?

கண்மணி சொன்ன பதிலை கேட்டு என் வண்டியோட Speed மட்டும் இல்ல என்னோட இதயமும் துடிப்பை ஒரு வினாடி நிறுத்தியது!

8 வருஷத்துக்கு முன்னாடியே இந்த நாளுக்காக plan பண்ணிட்டேன் Mr. Manikandan, என்று சொன்னாள்!!!

அதெப்படி கண்மணி, how could you have planned for this day 8 years ago என்று கேட்டேன்?

அவ கேட்டா, மணி உங்க கல்லூரியில IV (Industrial Visit) போயிருக்கீங்களா?

இதென்னடி கேள்வி? இன்ஜினியரிங் காலேஜ் படிச்சி உருப்படியா பண்ற விஷயத்துல முக்கியமான ஒன்னு IV trip தானே என்று சொன்னேன்! (உண்மை தானெங்க)

என்னுடைய கல்லூரி காலத்துல IV கூட்டிட்டு போனாங்க மணி, என்னோட 1st Year’ல பிச்சாவரம் வந்தோம்!

ஓ அதோட repeat தானா இது என்று கிண்டலா கேட்டேன்!

எஸ் மணி, But ஒரு சின்ன வித்யாசம் இற்கு என்று சொன்னாள், நானும் அதென்னடினு கேட்டேன்?

இங்க நான் 1st time வரும்பொழுது எனக்கு எதுமே தெரியாது….

Lecturers support ஓடத்தான் எல்லா இடத்துக்கும் போனோம்! அவங்க சொல்றது மட்டும் தான் செய்யணும் & அவங்க சொல்ற இடத்துக்கு மட்டும் தான் சுத்தி பார்க்க அனுமதி.

ஒரு freedom இருக்காது!

அனால் அவங்கள சொல்லியும் தப்பு இல்ல! They need to protect us, that’s their top priority than our entertainment!

But, மனசுல Freedom இல்லனு ஒரு feeling இருந்தது!

எனக்கு இந்த ஆறும்… கடலும்… சங்கமிக்கும் இடம் கொஞ்சம் நெருங்கி பார்க்கணும்னு ரொம்ப ஆசை!

எங்க lady lecturer கிட்ட இத பத்தி அப்போ சொன்னேன், She said, contact your HOD கண்மணி!

கொஞ்சம் பயம் இருந்தாலும், என்னோட விருப்பத்தை HOD கிட்ட சொன்னேன்.

அவர் முடியாதுனு சொல்லி இருந்தாலும் நான் கவலை பட்டு இருக்க மாட்டேன் மணி!

அவர் casual ஹா சிரிச்சிட்டே… அதெல்லாம் இப்போ முடியாதுமா… வேணும்னா.. நீ கல்யாணத்துக்கு அப்போறோம் உன் Husband கூட Honeymoon வரும் பொழுது இத பார்த்துக்கோமா என்று எல்லோர் முன்னாடியும் சொல்லிட்டார்

பசங்க சும்மாவே கலாய்ப்பாங்க…. இப்படி சொன்னதும் எல்லோரும் சிரிச்சிட்டாங்க Mani, என்று சொல்லும் போதே அவள் கையை பிடித்து கொண்டேன்.

எனக்கு புரிஞ்சது… இந்த பதிலை கேட்கும் பொழுது அவள் எந்த அளவுக்கு மனசுல பாதிக்கப்பட்டு இருப்பாள் என்று.

But நான் அணைக்கு எல்லோர் முன்னாடியும் HOD’ய பார்த்து இப்படி தான் சொன்னேன்!

“Hearty thanks for your valuable suggestion, Sir. I will keep this in mind and will certainly make it in a day in the future & trust me I will send you the selfie without fail!”

ஒரு நொடி அங்க என்னை பார்த்து சிரிச்சவனெல்லாம் வாய்யடைச்சி போய்ட்டாங்க மணி, including the HODனு சொன்னாள்…. (நானும் வய்டிச்சி போய்ட்டேன்னு சொல்லவே இல்ல!)

அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் மணி….. இணைக்கு 8th anniversary of that open challenge to my HOD னு சொன்னா!

stun ஆயிட்டேன்! இருக்காத பின்ன…..

பொண்ணுங்க REVENGE எந்த அளவுக்கு இருக்கும் என்று அன்று தான் தெரிந்து கொண்டேன்!

இருந்தாலும் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருந்தது!

கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சு, கண்மணியிடம் கேட்டேன்.

உங்க HOD உன்ன கல்யாணம் பண்ணிட்டு Honeymoon’க்கு தானே இங்க வர சொன்னார்!

நீ எதுக்கு இப்போ வந்தே என்று கேட்டேன்?

“நான் எப்போ… அந்த பௌர்ணமி நிலவொளியில்… உண் கண்ணோடு கண் வைத்து… கையோடு கை கோர்த்து… இதழோடு இதழ் சேர்த்தேனோ… அப்போவே நீ என் கணவன் ஆனாயடா கண்ணா!” என்று கண்மணி கூறினாள்.

அத கேட்கும் பொது… மனசுக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தது… மறுபடியும் அவள் propose பண்ணும் பொது இருந்த அதே உணர்வு… vera level feeling ஆயிட்டேன்!

Repeat தான் இருந்தாலும் சொல்றேன், என் கண்மணி ஒரு தேவதை!

Avalum Nanum Iravum Payanamum Final Part Love Story
Avalum Nanum Iravum Payanamum Final Part Love Story

அவளை நானும் பின்னிருந்து அணைக்கலாமென்று கைய எடுத்தேன்…. காத்திருந்தவள் போல கண்மணியும் சரியாக கைகோர்த்தால்!

அப்படியே இருவரின் கைகோர்த்து அணைத்தபடியே… சீரான வேகத்தில் வண்டி ஓட்டிட்டு வந்தேன்…

மணி இரவு 11.45 ஆகியிருந்தது…

சென்னை மாநகராட்சி அன்புடன் வரவேற்கிறது என்ற போர்டு பார்த்தேன்!

அடுத்த 10 நிமிஷத்துல கண்மணி வீட்டு வாசல்ல வேண்டிய நிறுத்தினேன்.

சரியாக மணி இரவு 11.55 காட்டியது!

சொன்ன நேரத்துல வீட்டுக்கு வந்துட்டோம்னு மனுசுல ஒரு தெம்பு வந்தது.

கண்மணி தன் அணைப்பை விடுவித்து வண்டியில இருந்து இறங்கி… என் முன்னாடி வந்து நின்றாள்…

நான் கேட்டேன்… How are you feeling now my கண்மணி?

“You have really made this day as an outstanding memorable day in my life என் அன்பு கனவா” என்று கூறினாள்.

என் கண்மணி என்னை கனவா என்று சொல்லியது கணவா என்றென்னி என்னை நானே கிள்ளி பார்த்தேன்!

கணவல்ல நிஜம் தான் கனவா என்று இதழோடு இதழ் பதித்தாள் 😛 

அவளையும்… அவள் இதழையும்… பிரிய மனமில்லாமல்… பிரிந்து வந்தேன். 😥 

அவளும் நானும் இரவும் பயணமும் இனிதே நிறைவுற்றது…

ஆனால், நீங்கள் பிரியாமல் இணைந்திருங்கள்… மற்றொரு தமிழ் காதல் கதைகளோடு (Tamil Love Stories) மீண்டும் சிந்திப்போம்!!!

Read more – என் முதல் காதலும் காதலியும் நீ இல்லை, ஆனால்!

Thanks for reading. Kindly share it with your crush & காதலர்!

19 thoughts on “அவளும் நானும் இரவும் பயணமும் ❤️ – இறுதி பகுதி

  1. Wow semma twist. That was unexpected avalum nanum iravum payanamum was superb. Continue writing. Good

  2. Really superb Story….avalum naanum iravum payanamum..power pack one 😍👌🏼.. Eagarly awaiting for next…

  3. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏unoda wife Kanmani Nejamaavae oru brave lady tha… Superbbbb Mani… 👏👏👏👏👏👏👏

  4. nan kaadhalil vilunthavan alla anaal kaadhalai unarnthavan enrum en ninaivil ningatha 2 angal en vilikal erinthu sambalagum varai nanum ennavalin kaathal niraintha vilikalum vaalum en viliyodu kalanthu

  5. Semma story ❣️
    Mani oda surprise ha vida
    Kanmani in surprise and proposal really Semma feelings nga, climax
    கணவல்ல நிஜம் தான் கனவா என்று இதழோடு இதழ் பதித்தாள்,Mm super ????
    Good story keep it up

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *