சில காதல்கள் முதல் பார்வையில் தொடங்குவதில்லை.
சில காதல்கள் முதல் சந்திப்பிலும் தொடங்குவதில்லை.
சில காதல்கள், ஒருவரின் வாழ்க்கைக்குள் நுழையாமல், அவரின் status-க்குள் மட்டும் நுழைந்து, அங்கேயே மெதுவாக வேரூன்றிவிடும்.
என் காதலும் அப்படித்தான், கண்மணி.
நான் உன்னை முதலில் காதலிக்கவில்லை. உண்மையைச் சொன்னால், ஆரம்ப நாட்களில் உன்னைப் பற்றி அதிகமாக நினைத்ததுமில்லை.
Covid காலத்தில் Clubhouse-ல் நடந்த design events, professional talks, LinkedIn connections — அந்த உலகத்தில் நீயும் இருந்தாய், நானும் இருந்தேன்.
நம்மிடம் பேச வார்த்தைகள் இருந்தன. ஆனால் காதல் இல்லை.
மரியாதை இருந்தது. ஆனால் உரிமை இல்லை.
நீ ஒரு பெயர். ஒரு designer. ஒரு professional circle-ல் இருந்த பழக்கமான முகம்.
அந்த இரண்டு வருடங்கள், காதலின் முன்னுரை போல இருந்திருக்க வேண்டும். அப்போது எனக்குத் தெரியவில்லை.
ஒரு கதையின் முதல் பக்கத்தில் கதாநாயகி வந்தாலும், அவள் கதாநாயகி என்பதை சில நேரம் கழித்துதான் கதாநாயகனுக்குப் புரியும் போல.
LinkedIn-லிருந்து WhatsApp வரை வந்த பயணம் கூட சாதாரணமாகத்தான் நடந்தது. நான்கு வருடங்களுக்கு முன் எண்கள் பரிமாறினோம். அந்த நாளில் நான் எந்த காதல் மணி ஓசையையும் கேட்கவில்லை.
“Okay, contact saved” என்ற அளவில்தான் அது இருந்தது.
ஆனால் காதல் சில நேரம் contact list-ல் save ஆகாது. அது silent-ஆ மனசுக்குள் save ஆகும்.
WhatsApp-ல் உன் DP.
உன் status.
உன் travel pictures.
உன் work updates.
உன் சின்ன சின்ன captions.
அவை எல்லாம் எனக்கு ஒரு ஜன்னல் மாதிரி மாறத் தொடங்கின. அந்த ஜன்னல் வழியாக நான் உன் வாழ்க்கையைப் பார்க்கவில்லை; உன் வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கினேன்.
நீ status போட்ட ஒவ்வொரு முறையும், views list-ல் நான் ஒரு பெயர்தான். ஆனால் என் மனசுக்குள் அது ஒரு சிறிய திருவிழா.
சில status-களை உடனே பார்த்தால் desperate-ஆத் தெரியும் என்று நினைத்து கொஞ்சம் தாமதமாகப் பார்த்த நாட்களும் உண்டு.
சில status-களுக்கு reply type செய்து delete செய்த நாட்களும் உண்டு.
“Nice place” என்று எழுதி, அது மிகவும் formal-ஆக இருக்கிறதே என்று அழித்துவிட்டேன்.
“Beautiful” என்று type செய்து, அது boundaries-ஐ தாண்டுமோ என்று பயந்து backspace அடித்துவிட்டேன்.
அப்போதெல்லாம் நான் உன்னை disturb செய்யவில்லை.
ஆனால் உன்னை மறந்தும் விடவில்லை.
நீ ஒரு travel photo போட்டாலே, என்னுள் ஒரு சின்ன curiosity. ஏனென்றால் நானும் travel freak. ஆனால் நீ travel பண்ணும் விதம் வேற மாதிரி இருந்தது. சிலர் இடங்களுக்கு போவார்கள். நீ இடங்களோடு கலந்துவிடுவாய். ஒரு beach photo-வில் நீ கடலைப் பார்க்கவில்லை; கடல் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றும். ஒரு hill station photo-வில் நீ குளிரை ரசிக்கவில்லை; அந்த குளிரே உன்னைச் சுற்றி கவிதை எழுதுவது போல இருக்கும்.
அப்போதுதான் முதல் spark.
“இந்தப் பெண்ணுக்கு travel பிடிக்கும்” என்று மட்டும் நினைக்கவில்லை.
“இந்தப் பெண் travel-ஐ காதலிக்கிறாள்” என்று நினைத்தேன்.
அதற்குப் பிறகு வந்தது அந்த photo.
Yacht.
அந்த ஒரு புகைப்படம்.
நீ Yacht-ல் நின்றிருந்தாயா, இல்லையா அந்த Yacht உனக்காகவே கடலில் நின்றிருந்ததா என்று எனக்கே தெரியவில்லை.
அந்த frame-ல் நீ அழகாக இருந்தாய் என்று சொல்வது மிகவும் சின்ன வார்த்தை. நீ stunning. Elegant. Confident. ஒரு travel queen போல.
பால் மேனி, காற்றில் நின்ற சிரிப்பு, அந்த அமைதியான அழகு — அந்த photo-வை scroll செய்ய மனசே சம்மதிக்கவில்லை.
அந்த நாள்தான் உனக்கு நான் என் மனசுக்குள் ஒரு பெயர் வைத்தேன்.
யட்சி – (Rakshashi அல்ல).
Yacht-ஆல் கிடைத்த யட்சி.
அது ஒரு அழகுப் பெயர் மட்டும் இல்லை. அது ஒரு மயக்கம்.
ஒரு மர்மம்.
ஒரு மின்னல்.
அந்த photo-வுக்குப் பிறகு நீ என் WhatsApp contact இல்லை, கண்மணி. நீ என் மனசுக்குள் notification இல்லாத notification.
நான் உன்னைப் பார்க்காமல் பார்த்த காதல் அன்றே தொடங்கியிருக்கலாம்.
நீ DP மாற்றினால், நான் கவனிக்காத மாதிரி கவனித்தேன்.
நீ travel story போட்டால், நான் casual-ஆ பார்த்த மாதிரி என் heart-ஐ pause செய்தேன்.
நீ singing பற்றி ஏதாவது போட்டால், “இந்தக் குரல் நேரில் எப்படி இருக்கும்?” என்று யோசித்தேன்.
நீ இருண்ட வானில் உள்ள நட்சத்திரத்தைப் பற்றி போட்டால், நான் சென்னை terrace-ல் நின்று வானத்தைப் பார்த்தேன்.
அந்த இரவுகளில் சில நேரம் என் மனசுக்குள் இளையராஜா சார் இசை ஓடும்.
“இளைய நிலா…” என்று தொடங்கும் அந்த மெலடி மாதிரி, உன்னைப் பற்றி நினைப்பது அமைதியாகவும், ஆழமாகவும் இருந்தது. நீ வானத்தைப் பார்த்தாயா, நான் அதே வானத்தைப் பார்த்தேனா என்று தெரியாது.
ஆனால் அந்த நட்சத்திரங்களுக்கு நடுவில் நம்முடைய பெயர்கள் ஒருநாள் அருகருகே எழுதப்படுமோ என்று ஒரு முட்டாள் ஆசை இருந்தது.
நான் முட்டாள்தான், கண்மணி.
ஆனால் உன்னைப் பற்றிய விஷயங்களில் மட்டும் அந்த முட்டாள்தனத்துக்கே ஒரு அழகு இருந்தது.
நீ ஒரு designer. நானும் designer.
உன் professionalism, clarity, taste — இதையெல்லாம் நான் தொலைவில் இருந்தே ரசித்தேன்.
அழகு ஒரு கதவைத் திறந்திருக்கலாம். ஆனால் உன் திறமை, உன் ambition, உன் travel energy, உன் இசை காதல் — அவைதான் என்னை உள்ளே அழைத்தன.
உன் நிறம் பால் மாதிரி.
என் நிறம் சாக்லேட் brown.
ஆனால் நம்ம இருவருக்கும் common colour ஒன்று இருந்தது — creativity மீது உள்ள காதல்.
அந்த நாட்களில் நான் உன்னை one-sided-ஆ crush பண்ணினேன் என்று சொல்லலாம்.
ஆனால் அது சத்தமில்லாத crush. தொந்தரவு இல்லாத காதல். நான் உன்னிடம் உரிமை கோரவில்லை. உன் silence-க்கும் space கொடுத்தேன். Professional zone-ல் இருந்த எல்லையைத் தாண்டாமல், அந்த எல்லையின் இந்தப் பக்கம் நின்று உன்னை ரசித்தேன்.
சில நேரம் உன் food story பார்த்து சிரித்திருக்கிறேன்.
“இந்தப் பொண்ணு சாப்பாட்டையும் ரசிக்கிற விதமே cute” என்று.
சில நேரம் airport story பார்த்து, “ஒருநாள் இந்த arrival gate-ல் நானும் காத்திருக்கப் போகிறேனா?” என்று மனசுக்குள் கேட்டிருக்கிறேன்.
சில நேரம் நீ ஒரு simple selfie போட்டாலும், “இவ்வளவு normal-ஆ இருக்கிற photo கூட ஏன் இவ்வளவு special-ஆ இருக்கு?” என்று குழம்பியிருக்கிறேன்.
அதற்கு பதில் எளிதுதான்.
அது photo special என்பதற்காக இல்லை.
அதில் நீ இருந்ததற்காக.
எல்லா காதலுக்கும் ஒரு turning point இருக்கும்.
என் காதலுக்கு அது ஒரு பெரிய proposal இல்லை. ஒரு candle light dinner இல்லை. ஒரு dramatic confession இல்லை.
அது இரண்டு வார்த்தைகள்.
“Don’t be formal.”
அந்த message வந்த நேரம் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் வழக்கம்போல formal-ஆ, safe-ஆ, professional-ஆ பேசிக்கொண்டிருந்தேன்.
ஏனென்றால் உன்னிடம் தவறான impression போகக்கூடாது. உன் comfort-ஐ கெடுக்கக்கூடாது. நான் பல வருடம் silently admire செய்த பெண்ணிடம், ஒரு தவறான வார்த்தையால் தூரம் வந்துவிடக் கூடாது என்ற பயம்.
அப்போது நீ சொன்னாய்.
“Don’t be formal.”
மற்றவர்களுக்கு அது ஒரு சாதாரண message.
எனக்கு அது ஒரு கதவு திறந்த சத்தம்.
அந்த இரண்டு வார்த்தைகளில் நீ என்னை உன் world-க்கு கொஞ்சம் உள்ளே அழைத்தாய்.
“கள்வா, இவ்வளவு தூரம் நின்று பேசாதே” என்று சொல்லாமல் சொன்னாய்.
அந்த நாளுக்கு பிறகு conversation-களின் நிறம் மாறியது. Formal words மெதுவாக soft ஆனது. Soft words மெதுவாக teasing ஆனது. Teasing மெதுவாக longing ஆனது. Longing மெதுவாக love ஆனது.
நீ கண்மணி ஆனாய்.
நான் கள்வன் ஆனேன்.
கள்வன் என்றால் thief இல்லை.
நான் திருடியது பணமோ, பொருளோ இல்லை.
நீ கவனிக்காத உன் சின்ன சின்ன நொடிகளைத்தான் திருடினேன்.
உன் status-ல் இருந்த சிரிப்பைத் திருடினேன்.
உன் voice note-ல் இருந்த warmth-ஐத் திருடினேன்.
உன் “சாப்பிட்டியா?” என்ற கேள்விக்குள் இருந்த அக்கறையைத் திருடினேன்.
அதனால்தான் நான் கள்வன்.
உன் இதயத்தை திருட வரவில்லை.
ஆனால் என் இதயத்தை உன்னிடம் வைக்க வந்தவன்.
அந்த last couple of months… அது ஒரு dream sequence மாதிரி இருந்தது.
Chats, calls, teasing, late-night texts, travel dreams, design discussions, song memories — எல்லாமே புதிதாக இருந்தாலும், ஏற்கனவே பழக்கமானது போல இருந்தது.
சில நேரம் நீ பேசும்போது, நான் பதில் சொல்ல மறந்துவிடுவேன். உன் குரலைக் கேட்பதே ஒரு reply போல இருக்கும்.
சில நேரம் நீ சிரிக்கும்போது, என் மனசுக்குள் “மன்றம் வந்த…” மாதிரி ஒரு ராஜா சார் மெலடி மெதுவாக ஓடும்.
சில நேரம் நீ அமைதியாக இருந்தால் கூட, அந்த silence-ல் நான் comfort கண்டேன்.
நீ 80s, 90s இளையராஜா பாடல்களை விரும்புகிறாய் என்று தெரிந்த நாளில், இன்னொரு connection என் மனசுக்குள் விழுந்தது. ஏனென்றால் சில மனிதர்கள் playlist-ஐ share பண்ணமாட்டார்கள்; அவர்கள் மனசின் காலத்தை share பண்ணுவார்கள். உன் Ilaiyaraaja love எனக்கு சொன்னது — நீ fast world-ல் வாழ்ந்தாலும், உன் உள்ளே ஒரு மென்மையான பழைய கால மழை இருக்கிறது என்று.
அந்த மழையில் நனைவதற்குத்தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேனா?
முதல் சந்திப்பு நெருங்கியபோது, என் confidence எல்லாம் எங்கேயோ போய்விட்டது. நான் Chennai-லிருந்து உன்னை meet பண்ணப் போகிறேன்.
நீ Kochi-யின் மண்வாசனையோடு என் வாழ்க்கைக்குள் வரப் போகிறாய். பல வருடம் WhatsApp status-ல் பார்த்த கண்கள், இப்போது நேரில் என்னைப் பார்க்கப் போகின்றன.
அந்த thought-ஐ handle பண்ண முடியவில்லை.
Bouquet வாங்கச் சென்றபோது கூட நான் தோற்றுப்போனேன்.
நான் designer. Colours பற்றி எனக்கு தெரியும்.
ஆனால் உன்னை வரவேற்க எந்த நிறம் சரி என்று flower shop-ல் நின்றபோது, எல்லா colour theory-யும் மறந்துவிட்டது.
Red roses too direct-ஆ?
White flowers உன் பால்மேனிக்கு match ஆகுமா?
Mixed bouquet உன் travel soul-க்கு சரியா?
இறுதியில் நான் எடுத்த Yellow bouquet perfect என்பதற்காக அல்ல. அதை பிடித்திருந்த என் கைகள் நடுங்கியதற்காக அது special.
Airport arrival gate.
அங்கே நின்ற அந்த நிமிடங்கள், என் வாழ்க்கையின் longest loading screen. Flight landed என்று board-ல் வந்தவுடன் என் heartbeat வேறு level. வெளியே வரும் ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து, “இவளா?” என்று மனசு கேட்கிறது. ஒவ்வொரு trolley சத்தமும், ஒவ்வொரு footsteps-மும், ஒவ்வொரு smile-மும் உன் வருகையைப் போல தோன்றியது.
பிறகு நீ வந்தாய்.
WhatsApp status-ல் இருந்து real life-க்கு.
Yacht photo-வில் இருந்து என் கண் முன்னால்.
ஒரு பெயராக இருந்தவள், ஒரு பெண்ணாக.
ஒரு crush-ஆக இருந்தவள், என் கண்மணியாக.
நீ நடந்துவந்த அந்த சில seconds-ல், என் ஆறு வருட நினைவுகளும் ஒரே நேரத்தில் என் முன்னால் ஓடின. Clubhouse rooms. WhatsApp DP. Travel stories. Yacht photo. “Don’t be formal.” Late night texts. சின்ன சின்ன சிரிப்புகள். எல்லாம் சேர்ந்து ஒரு இசையாக மாறியது.
அந்த நேரத்தில் என் மனசுக்குள் ஓடியது ஒரே வரி:
“சுந்தரி கண்ணால்…”
ஏனென்றால் உண்மையிலேயே, முதலில் என்னை நிறுத்தியது உன் கண்கள்தான்.
நீ அருகில் வந்தாய்.
நான் Yellow bouquet நீட்டினேன்.
நீ சிரித்தாய்.
அந்த சிரிப்பில் உன் பற்களின் அழகான வரிசை தெரிந்தது. நான் பலமுறை நினைத்த அந்த smile, இப்போது என் முன்னால் இருந்தது. உன் கண்கள் — அவை photo-வில் mesmerizing. ஆனால் நேரில்? அவை ஆபத்து. அவை என்னை முழுக்க எடுத்துச் செல்லும் அளவுக்கு ஆழம் கொண்டிருந்தன.
நான் பேச வேண்டும்.
ஆனால் வார்த்தைகள் வரவில்லை.
நீ பார்த்தாய்.
நான் பார்த்தேன்.
அந்த நொடியில் எனக்கு புரிந்தது.
நான் இத்தனை நாள் உன்னைப் பார்க்காமல் பார்த்த காதல், இப்போது என்னை நேராகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
கண்மணி,
Yacht-ஆல் கிடைத்த யட்சி நீ.
ஆனால் இந்தக் காதல் ஒரு photo-வில் மட்டும் தொடங்கவில்லை. அது பல வருடங்களாக அமைதியாக பாதை போட்டது. ஒரு status-ல் சிரித்தது. ஒரு song-ல் நின்றது. ஒரு “Don’t be formal” message-ல் உயிர் பெற்றது.
அன்று airport arrival gate-ல் நான் Yellow bouquet-ஐ மட்டும் கொடுக்கவில்லை.
பல வருடம் பேசாமல் வைத்திருந்த என் மனசையும் நீட்டினேன்.

நீ அதை வாங்கினாயா இல்லையா என்று Part 2-ல் சொல்லலாம்.
ஆனால் அந்த நொடியில், நான் என்னுள் மட்டும் சொன்னேன்:
“கள்வன் காத்திருந்தான்.
கண்மணி வந்துவிட்டாள்.”
